தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது வழக்கு
செப். 28,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ.பத்ரி நாராயணன் IPS அவர்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம், உரிய ஆவனங்கள் இன்றி, அதிக பாரம் ஏற்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1444 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.