
புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியோடு அவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்த பணி கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் 10.11.2019ம் தேதி இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த நபர் ஒருவர் ரூ. 1.74 லட்சத்தை பெட்ரோல் பங்கிலேயை வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை கண்ட அங்கு பணிபுரிந்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளான கார்த்திக், புஷ்பராஜ் ஆகியோர் அந்த பணத்தை எடுத்து மாவட்ட சிறை கண்காணிப்பாளர் திருமதி. ருக்மணி பிரியதர்ஷினி அவர்களிடம் ஒப்படைத்தனர். பின் உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்