Police Department News

மேலூர் அருகே கீழவளவில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

மேலூர் அருகே கீழவளவில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

மதுரை மாவட்டம் வேலூர் அருகே கீழவளவை சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரின் மகள் ராசு என்ற ராஜேஸ்வரி வயது-25, இவருக்கு திருமணமாகவில்லை அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி பூங்கோதையின் பராமரிப்பில் இருந்து வந்தார் இந்நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரி வழக்கம் போல் கீழவளவு பஞ்சபாண்டவர் மலை அருகே உள்ள அவர்களது வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது இனம் தெரியாத பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்துள்ளார் அவரை அக்கம் பக்கத்தினர் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சையில் இருந்தவர் நேற்றிரவு சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார்
ராஜேஸ்வரியின் இழப்பு அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த இறப்பு தொடர்பாக மேலூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்…

Leave a Reply

Your email address will not be published.