
மதுரை கொத்தவால் சாவடியில் ஜவுளிகடை ஊழியருக்கு கொலை மிரட்டல், விளக்குத்தூண் போலீசார் விசாரணை
மதுரை, உத்தன்குடி, ரைஸ் மில் தெருவில் வசிக்கும் மார்நாடு மகள் உமா வயது 21/2021, இவர் மதுரை கொத்தவால் சாவடி தெருவில் உள்ள K.M.சாரீஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 ம் தேதி காலை 10.45 மணியளவில் இவர் வேலை பார்க்கும் கடை அருகில் செயல்படும் ராஜ்தீப் பேசன்ஸ் கடை உரிமையாளரின் மகள் சோனம் என்பவர் கடைக்குள் அத்து மீறி நுழைந்து உமாவை மிகவும் அசிங்கமாக பேசி கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்த உமாவை அறைந்ததாகவும் அதை எதிர்த்து கேட்டதற்கு கிழே தள்ளி விட்டதாகவும் அதனால் வாதிக்கு முழங்கையில் அடிபட்டதாகவும் அதை பார்த்த தஸ்மிகா என்பவர் சோனத்திடம் ஏன் அடித்தீர்கள் என்று கேட்க மேற்படி சோனம் என்பவர் உங்களால்தான் எங்கள் பிழைப்பு கெட்டுப் போகிறது. எங்கள் வியாபாரத்திற்கு தடையாக உள்ளீர்கள் உங்கள் கடையை காலி செய்யவில்லையென்றால் உங்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றும் உங்களை ஆட்கள் வைத்து கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டல் விட்டுள்ளார், மேற்படி சோனம் என்பவர் மீது 8 ம் தேதி இரவு 7.25 மணியளவில் மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திரு.லிங்கப் பாண்டி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
