
மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் ஊழியத்தில் கண்ட உத்தரவுகளை மீறி செயல்படுவது குறித்து தணிக்கை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட யா. ஒத்தக்கடை வெளவாள் தோட்டத்திலுள்ள சோசியல் ரெக்ரேசன் கிளப்பை ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. காட்வின் ஜெகதீஷ் குமார் அவர்கள் தலைமையில் சிலைமான் காவல் ஆய்வாளர் திரு. முத்துகுமார் மற்றும் காவல் அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் தணிக்கை செய்தார்கள் அப்போது மேற்படி மனமகிழ் மன்றத்தில் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவை மீறி சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 54,510/− தை கைப்பற்றி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாவட்டத்தில் விதி முறைகளை மீறி சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மன மகிழ் மன்றங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
