
மதுரை அருகே கீழவளவில் மது பாட்டில் விற்பனை செய்தவர்கள் கைது
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான கடை விடுமுறை என்பதால் கீழவளவு சேர்ந்த மழுவேந்தி மகன் சேவற்கொடியோன்-வயது 45 மற்றும் கீழையூர் சேர்ந்த பெரியசாமி மகன் ராமு-வயது 31 ஆகியோர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர் தகவல் அறிந்த கீளவளவு காவல் துறையீனர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
