விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை காவல்துறை காவல் உட்கோட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு.
தேவர்குரு பூஜையை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
114 வது தேவர்குரு பூஜை 59 வது குரு பூஜையானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதியில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வழக்கம் ஆனால் கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அதிகம் கூடுவது தடையில் உள்ளது.
அதன்படி அருப்புக்கோட்டை நகரில் மறவர் தெரு,நேருமைதானம்,இராமசாமிபுரம், கள்ளர்தெரு, மீனாட்சிபுரம் தெரு, அகமுடையார் டிரஸ்ட்,பாளையம்பட்டி,புளியம்பட்டி, முதலிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அருப்புக்கோட்டை நகர் சார்பு ஆய்வாளர்களான திரு.செந்தாமரை கண்ணன், திரு.நாகராஜபிரபு, மற்றும் ஆவியூர் சார்பு ஆய்வாளர் பால்பாண்டியன் தலைமை காவலரான திரு.அன்பழகன், திரு.தமிழ்செல்வன், திரு.வடிவேல், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் குருபூஜைக்கு செல்பவர்கள் சொந்த வாகனத்தில் நான்கு சக்கரவாகனம் மட்டுமே அனுமதி மற்ற இருசக்கர வாகனம் திறந்தவெளி வாகனத்திற்கும் அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்கள்.
