
தூத்துக்குடி மாவட்டம்: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் தலைமையிலான போலீசார் கடந்த 24.10.2021 ரோந்து பணியில் ஈடுபட்ட போது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த சேரகுளம் மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த யாக்கோபு மகன் சாமுவேல் (51) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி சாமுவேலை கைது செய்தனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சாமுவேல் என்பவர் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
