
நேதாஜி முருகன் கோவில் முதல் ஜான்ஸிராணி பூங்கா வரை ஒரு வழிப் பாதையாக மாற்றம், போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை.
மதுரை நேதாஜி முருகன் கோவில் முதல் ஜான்ஸிராணி பூங்கா வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது குறித்து மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மதுரை நகர் பிற மாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகைக்கடைகள் ஜவுளிக்கடைகளுக்கு செல்லும் வழியாக மேலமாசி வீதி நேதாஜி ரோட்டில் சந்திப்பது வழக்கம் மேலும் இந்த சந்திப்பில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும் அமைந்துள்ளது. எனவே இந்த சாலையில் அதிக வாகன போக்குவரத்து பாதசாரிகளால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது மேலும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.
எனவே அந்த பகுதியில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ஜான்சிராணி பூங்கா முதல் நேதாஜி ரோடு முருகன் கோவில் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜான்ஸிராணி பூங்காவில் இருந்து முருகன் கோவில் வழியாக மேலமாசி வீதி திருப்பரங்குன்றம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இனி கான்சா மேட்டுத்தெரு டி.எம். கோர்ட்டு வழியாக மேலமாசி வீதிக்கு வர முடியும் அதே போன்று மேல கோபுரம் தெரு மேல ஆவணி மூலவீதியில் இருந்து வரும் வாகனங்களும் நேதாஜி ரோடு முருகன் கோவிலுக்கு செல்வதற்கு கான்சாமேட்டுத்தெரு, டி.எம். கோர்ட்டு மேல மாசிவீதி கோவிலுக்கு செல்ல முடியும். எனவே இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
