
திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின் போது உயிர் நீத்த காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையை சேர்ந்த 318 வாரிசுகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் கருணையின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் 318 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையை சேர்ந்த 11 பேருக்கு பணி நியமண ஆணையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் அவர்கள் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு. மதிவாணன் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கி வாழத்துக்களை தெரிவித்தார்.
