
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப, அவர்கள் மேற்பார்வையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்க்கரசி அவர்கள் தலைமையிலான போலீசார் நேற்று (31.10.2021) கல்லாமொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குலசேகரப்பட்டினம் அரிகேசவநல்லூர் பகுதியை சேர்ந்த சேவூ மைதீன் மகன் கோத்தார் மைதீன் (62) என்பவர் கல்லாமொழி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடை முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் கோத்தார் மைதீனை கைது செய்து அவரிடமிருந்து 105 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
