
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் லட்சுபுரம் பகுதிகளில் டிரைவர்கள் மீது தாக்குதல்
மதுரை துவரிமான் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் (56). சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று லட்சுமிபுரம் பகுதியில் சரக்குகளை இறக்கினார். அப்போது அவருக்கும், அதே பகுதியில் இருந்த காவலாளிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கண்ணனை தாக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை கைது செய்தனர்.
மேலூர் சந்தைப்பே ட்டையை சேர்ந்தவர் அயூப்கான் (45) ஷேர் ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சென்ற போது 5 பேர் கும்பல் தாக்கியது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
