
மதுரை ரயில்வே காலனியில் திருடு போன தங்க நகைகளை விரைந்து கண்டு பிடித்து மீட்ட காவல் துறையினர்
மதுரை, ரயில்வே காலனி, மல்லிகை குடியிருப்பில் வசித்து வருபவர் பால்சாமி மகன் மாரியப்பன் வயது 52/2021, இவர் தனது வீட்டிற்குள் தங்க வளையல், மற்றும் நகைகள் திருடு போனதாகவும் அதனை தனது வீட்டில் வேலை பார்த்து வரும் நாகஜோதி வயது 38 அவர்கள்தான் எடுத்திருக்க வேண்டும் என சந்தேகத்தின் பேரில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனை காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி என்பவர் தலைமையில் திரு. மாயன் சார்பு ஆய்வாளர், தனிப்படை பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் அமலநாதன், சிறப்பு சார்பு ஆய்வாளர் பன்னீர் செல்வம், தலைமை காவலர் ஜெகதீசன், ஆகியோர்கள் தீவிர விசாரணை செய்து இவ்வழக்கின் குற்றவாளி திருமதி நாகஜோதி என்பவரை கைது செய்து, எட்டு அரை பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மிக விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
