
கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலபத்திரராமபுரம் அருகே சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரை கள்ளத்தொடபின் காரணமாக இளங்கோவனின் மனையிடன் சேர்த்து கொலை செய்த சண்முகநல்லூரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ்குமார் என்ற சுரேஷ் வயது 40 என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க ஊத்துமலை காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS., அவர்கள் அறிவுறித்தியதன்பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின்படி மேற்படி முத்துப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ்குமார் என்ற சுரேஷ் வயது 40, /2021, என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பு காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் சமர்பித்தார்.
