
தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்கள் தீபாவளித் திருநாளன்று தூத்துக்குடி மாசிலாமணிபுரம் தெருவிலுள்ள பாசக்கரங்கள் என்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் 45 ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை பட்டாசு, மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் திரு கனேஷ், தென்பாகம் காவல் நிலையம் ஆய்வோளர் திரு. ஆனந்துராஜ் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள் திரு. நாகராஜன், சிவகுமார் உட்பட காவல் துறையினர் பலர் உடனிருந்தனர்.
