Police Department News

தீபாவளி நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் மற்றும் குடிபோதையில் இரு சக்கர வானம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை – நேற்று எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நன்றி.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே காலையில் 1 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி தமிழக அரசு உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 25 பேரும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 11 பேரும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 15 பேரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 10 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 9 பேரும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 13 பேரும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 14 பேரும் என மொத்தம் 97 பேர் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 20 பேர் கைது செய்யப்பட்டு, 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக கொண்டாடிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.