
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபட்ட நபர் கைது.
திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு. ஜமால், அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திசையன்விளை EB office பின்பு திசையன்விளை, கீழவாசலை சேர்ந்த திவாகர்(23), என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி காவல் ஆய்வாளர் அவர்கள் திவாகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு திவாகரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் எதிரியிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
