
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் IPS அவர்கள் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் அவர்கள் நேற்று முன்னிர்பள்ளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முன்னீர்பள்ளம், மருதம் நகர், கோபாலசமூத்திரம், பிராஞ்சேரி மேலசெவல், செங்குளம், சுத்தமல்லி, பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களுக்கு நேரில் சென்று இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து கொண்டு அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் பொதுமக்களுக்கும், சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தது காவலர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பார்திபன் , காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவல் துறையினரும் கலந்து கொண்டனர்.
