மதுரை, பீபீகுளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி மதுரை மத்திய சிறையில் அடைப்பு
மதுரை, பீ.பீ.குளம், மருதுபாண்டி நகரில் வசித்துவருபவர் ஈஸ்வரன் என்பவரது மகன் சரத்குமார் வயது 29/2021, இவர் கொலை முயற்சி மற்றும் படைகலன்கள் சட்ட வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் 06.11.2021 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின் பேரில் சரத்குமாரை மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று 06.11.2021 அடைக்கப்பட்டார்.