
விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக எஸ்பிகே ஸ்கூல் ரோடு, பெர்கின்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
அடுத்தடுத்து நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.மனோகர் அவர்களின் உத்தரவுப்படியும் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் மேற்பார்வையில் நகர் காவல்நிலைய ஆய்வாளர்களான சட்டம் ஒழுங்கு திரு.பாலமுருகன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா தலைமையில், சார்பு ஆய்வாளர்களான திரு.முத்துக்குமார், திரு.பாலமுருகன் மற்றும் காவலர்களான திரு.தனவேல், திரு.ராமமூர்த்தி,
திரு.சரவணன், திரு.சுசிக்குமார், திரு.ராஜாராம்
திரு.மணி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
சிசிடிவி கேமராக்களில் காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தநிலையில் (13.11.21)செயின்பறிப்பில் ஈடுபட்டதாக பாலாஜி(22), அசோக்குமார்(19) , அருண்(22), மதன்ராஜ்(22), பாபுரிஷிகண்ணன் (20) ஆகிய 5 இளைஞர்கள் பிடித்து
விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி விசாரணையில் அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 21 3/4 சவரன் தங்கநகை மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் , கத்தி உள்ளிட்டவைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனால் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன மக்கள் மத்தியில்
