
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.11.2021 அன்று உதவி ஆய்வாளர் திரு. சிவதானு அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது டாணா விலக்கு அருகே
டாணா, வாட்சுமேன் நடுத்தெருவை சேர்ந்த முத்துகணேஷ்(20) என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் முத்துகணேஷை வி.கே.புரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றார். பின் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு முத்துகணேஷை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் எதிரியிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
