கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் போக்சோ போன்ற வெவ்வேறு வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான மானூர் வட்டம், மேல தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரின் மகன் இசக்கித்துரை என்ற கட்டதுரை(20) என்பவர் அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு. பத்மநாப பிள்ளை அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 17.11.2021 இன்று எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்,
சீவலப்பேரி காவல் நிலையத்தில் கொலை, கொலைமுயற்சி மற்றும் அடிதடி வழக்கில் எதிரியான பாளையங்கோட்டை வட்டம், குப்பக்குறிச்சி, தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் தங்கசுடலை என்ற சுரேஷ்(25) என்பவர் கொலை, கொலை முயற்சியில் மற்றும் அடிதடியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு. பெருமாள் (பொறுப்பு) அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 17.11.2021 இன்று எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்,
நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, வாகைகுளம், மணிமேகலை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ஜெயபால் (55) என்பவர் போக்சோ வழக்கில் எதிரி ஆவார். இவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிரேமா அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 17.11.2021 இன்று எதிரி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.