
மதுரை ATM ல் இருந்த பணத்தை மீட்டு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்
மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் திரு. குருமூர்த்தி (HG 48 ) என்பவர் 18,11,2021 அன்று காலை கடச்சநேந்தல் பகுதியில் SBI ATM ல் பணம் எடுப்பதற்காக சென்றார். அந்த ஏடிஎம்மில் பணம் ரூபாய் 10,000 வெளியில் இருந்ததை பார்த்தார். பின்னர் அப்பணத்தை எடுத்து கொண்டு கோசாகுளத்தில் உள்ள SBI வங்கிக்கு சென்று அங்கு உள்ள மேலாளர் அவர்களை சந்தித்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தார். பின்னர் வங்கி மேலாளர் அவர்கள் இவர் செய்த இந்த செயலை பாராட்டி இவருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். மேலும் இவரது பணி சிறக்க நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
