ராஜஸ்தான் சென்று குற்றவாளிளை கைது செய்த தனிபடை போலீசார்
மதுரை கீழ ஆவணி மூல வீதி குன்னத்தூர் சத்திரம் அடுத்துள்ள கட்டிடத்தின் மாடியில் அழகு சாதன பொருட்கள் மொத்தக்கடை வைத்திருப்பவர் அனில்குமார்
கடந்த டிசம்பர் மாதம் 13 ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சென்றார் மறுநாள் வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு வசூல் தொகை 8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இது தொடர்பாக. கடை ஊழியர் மங்குசிங் வயது 31/2021, அவரது நண்பர் ராகேஷ்நாத் வயது 25/2021, ஆகியோரை பிடிக்க. மதுரை காவல் துணை ஆணையர் திரு. தங்த்துரை அவர்களின் தலைமையிலான தனிப்படையிர் காவல் உதவி ஆணையர் திரு முத்துராசு அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. அபிமன்யு, அவர்களின் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. கோட்டை முனியாண்டி, தலைமை காவலர்கள் கருப்பையா, கமலஹாசன் ஆகியோர்கள் ராஜஸ்தான் சென்று குற்றவளிகள் மங்குசிங், ராகேஷ்நாத் ஆகியோரை கைது செய்து மதுரை அழைத்து வந்தனர்.5.74 லட்சம் பணம் மீட்க்கப்பட்டது. தனிப்படை போலீசாரை மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் மற்றும் துணை ஆணையர் திரு . தங்கத்துரை ஆகியோர்கள் பாராட்டினர்
