மதுரையில் மருந்து கடைகளில் போலீசார் சோதனை
மதுரையில் பள்ளிகள் கல்லூரிகள் அருகில் உள்ள மருந்துக்கடைகளில் போதை தரக்கூடிய மருந்துகள் விற்க்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகின்றன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடந்த 28 ம் தேதி கல்லூரி மற்றும் பள்ளி அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் அடிமை பழக்கத்தை உருவாக்க கூடிய மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தவிட்டனர்
அதன் பேரில் 28.12.2021 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் மதுரை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சம்பத்குமார் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி. லதா அவர்களின் தலைமையில் போலீஸார் மற்றும் மருந்தக ஆய்வாளர் திருமதி. நிர்மலாதேவி ஆகியோர் மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்து விற்பனை செய்வதை கண்டறிய ரகசிய ஆட்களை அனுப்பியும் நேரடியாகவும் சென்று கலப்பணியாகவும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்
போதைப்பொருள் சம்பந்தமாக தகவல் மற்றும் உதவிக்கு பொது மக்கள் 9498410581 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
