செயின் பறிப்பு குற்றவாளிகளை, விரட்டிப் பிடித்த துடிப்புமிக்க மதிச்சியம் காவலர்களை பாராட்டிய மதுரை காவல் ஆணையர்
மதுரை, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த செண்பகவல்லி என்ற பெண்ணிடம் செயினை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மதுரை மதிச்சியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது
அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் மற்றும் காவலர்கள் மன்மதன் ராஜசேகர் ஆகியவர் நிற்பதை பார்த்து வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடிய சபரி மற்றும் ஹரிஹரன் இருவரையும் காவலர்கள் விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர்
மேலும் அவரிடமிருந்து திருட்டு பைக் 8 சவரன் நகை செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர் .இவர்களின் இந்த துடிப்புமிகு செயலை பாராட்டி மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சான்ஹா அவர்கள் இவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
