மதுரையில் பொது நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பங்கேற்பு
மதுரை கரும்பாலை பி.டி.குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்க பொது நூலகத்திற்கு மற்றும் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா தலைமையில் இலவசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் மற்றும் திருநங்கை பிரியாபாபு அவர்களும் புத்தகங்கள் வழங்கினார்கள். வழக்கறிஞர் முத்துக்குமார் சங்கத்தலைவர் செல்வராஜ் செயலாளர் பொன்னுச்சாமி ஆசிரியர்கள் சண்முகவேல் வினோதா முத்துமாரி மாநில பேரிடர் மேலான்மை குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
