Police Department News

மாமியாரை கொலை செய்துவிட்டு சிலிண்டர் வெடித்து இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது

மாமியாரை கொலை செய்துவிட்டு சிலிண்டர் வெடித்து இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது

திருச்சி விஸ்வாஸ்நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வந்த வருபவர் ஆசிம்கான் (28), இவரின் தாயார் நவீன் என்பவர் கடந்த 30.12.21-ந்தேதி பேரக்குழந்தைக்கு பால் காய்ச்சும்போது கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து, புடவையில் தீப்பற்றி உடல் பரவி எரிந்ததாக மகன் ஆசிம்கான் கொடுத்த புகாரை பெற்று காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழக்கில் சந்தேகம் உள்ளதாக, வழக்கின் உண்மை தன்மையை அறிய புலன்விசாரணை செய்ய உத்தரவிட்டதின் பேரில், காந்திமார்க்கெட் காவல் உதவி ஆணையர் தடய அறிவியல் நிபுணர்குழு மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் நேரடி விசாரணை செய்ததில், சம்பவ நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தபோது, சம்பவ இடத்தில் ரத்தம் சிதறி கிடந்ததையும்,
மேலும் இறந்தவரின் உடலில் இரண்டு வித ஆயுதத்தால் தாக்கிய காயம் உள்ளதாக தடய அறிவியல் நிபுணர்களின் தெரிவித்ததின்பேரில், விசாரணை தீவிரபடுத்தினர்.

மேலும் வீட்டில் உள்ளவர்களின் விசாரணை செய்ததில், மருமகள் ரேஷ்மா (27) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரணை செய்தபோது, தான் கர்ப்பமாக இருந்து போது, ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், தற்போது மீண்டும் இன்னும் ஒரு குழந்தை தேவையில்லை என கூறி, கடந்த ஜனவரி மாதம் குழந்தை கலைக்க சொல்லியும், அதற்காக அறுவை சிகிச்சை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் தற்போதுவரை வயிற்றுவலியால் உடல் உபாதைகள் உள்ளதாகவும், ஆகையால் மாமியாரின் மேல் கோபமாக இருந்துவந்தாகவும், சம்பவதன்று இஞ்சி இடிக்கும் குழவிகல் மற்றும் ஸ்க்ருடிரைவர் கொண்டு தாக்கி கொலை செய்ததாக குற்றத்தை ஓப்புக்கொண்டார்.

மேலும் திட்டமிட்டு செய்த கொலையை மறைக்க கேஸ் வெடித்து தீ பிடித்து இறந்தாக நடகமாடியதாக தெரிவித்தவரை, கைது செய்தும், 174 CrPC-யாக பதியப்பட்ட குற்ற வழக்கை 302 IPC கொலை வழக்காக சட்டப்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு, கொலையாளியான ரேஷ்மாவை கைது
செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் உதவி ஆணையர் காந்திமார்க்கெட் சரகம் மற்றும் காவல் ஆய்வாளர் காந்தி மார்க்கெட் காவல்நிலையம், காவல் ஆய்வாளர் அனைத்து மகளிர் காவல்நிலையம், பொன்மலை மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.