
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் B2 காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி. வடிவுக்கரசி அவர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பொது மக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்து கூறி பக்தர்களுக்கு முக கவசம் வழங்கினார். மேலும் சமூக இடை வெளியை பின் பற்றி நோய் தொற்றை தவிற்க அறிவுறுத்தினார் இவர் செய்த இந்த செயலை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
