Police Department News

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் குற்றவாளிகள் கைது சுமார் 8,15,000/- மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5000/- ரொக்கம் பறிமுதல்

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் குற்றவாளிகள் கைது சுமார் 8,15,000/- மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5000/- ரொக்கம் பறிமுதல்

மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட வண்டியூர், சதாசிவம் நகர் மற்றும் வளர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவில் வந்து வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி காவல் துணை ஆணையர் (வடக்கு) முனைவர் திரு.T.K.ராஜசேகரன் IPS அவர்களின் நேரடிப்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் மற்றும் ஆய்வாளர் திரு. பாண்டியன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் குற்றச்செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற ராஜா மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது மைத்துனர் பழனிமுருகன் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அண்ணாநகர் மற்றும் வளர்நகர் பகுதிகளில் பூட்டியிருககும் வீடுகளின் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த 4 வழக்குகளில் தொடர் புடையது தெரிய வந்தது.அவர்களிடமிருந்து சுமார் 8,15,000/- மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைககள் மற்றும் ரூபாய் 5000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள் இந்த குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு நகைகள் மற்றும் பணத்தை எதிரிகளிடமிருந்து மீட்ட தனிப்படையினரை மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் ( வடக்கு)முனைவர் திரு.T.K.ராஜசேகரன் IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.