மதுரை மாவட்டத்தில் கொரானா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்பேரில் மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.
இன்று ஒத்தக்கடை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பொதுமக்களுக்கும் முகக் கவசங்களை வழங்கி பொதுமக்கள் பொது இடங்களில் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அத்துடன் நில்லாமல் மதுரை மாவட்டத்தில் மேலும் பொதுமக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வு வழங்கி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மதுரை மக்களுக்கு அறிவுரை வழங்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் பொதுமக்களும் காவல்துறைக்கு தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி கொரானா பரவலை கட்டுப்படுத்த உதவிடுமாறு மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
