11.01.2022
கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து
காவல்நிலைய ஆய்வாளர் திரு . அசோக் குமார் மற்றும் President V.GOPI (RCC-BLUEWAVES CH.Besant Nagar அவர்கள் மூலம் நடைபெற்றது.
இன்று காலை 11.30 மணியளவில் அடையாறு Telephone Exchange வாகன சோதனை சாவடி பேருந்து நிலையம் நிலையத்தில் பொதுமக்கள் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுத்தும் முக கவசம் அணிவித்தும் கொரோனா விழிப்புணர்வை J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.அசோக்குமார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. சந்திரமோகன் மற்றும் சமூக ஆர்வலர் President திரு.கோபி RCC Blue Waves Ch TN Besant Nagar அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் பாதசாரிகள் , ஆட்டோ ஓட்டுனர், சிறியவர், பெரியோர் , இரு சக்கர வாகன ஓட்டிகள் ,நான்கு சக்கர வாகன ஓட்டிகள்,பேருந்திற்க்காக நின்றிருப்போர் மற்றும் வணிக வளாகம் , பூ வியாபாரம் செய்வோர் சிறு வியாபாரிகள் ஆகிய அனைவருக்கும் கொரோனாவை தடுக்கும் வாசகங்கள் அடங்கிய கைபிரதிகள் வழங்கப்பட்டது மற்றும் ஒலிபெருக்கி மூலமாக கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்றும் , சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ,முக கவசம்,சானிடைசர் பயன்படுத்தவேண்டும் என்றும் காரணமின்றி வெளியே வரகூடாது என்றும் கூறி காய்ச்சல் மற்றும் தும்மல் ஏற்ப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்ற நல்ஆலோசனை மற்றும் அறிவுரையும் வழங்கினார்கள். பலவிதமான நன்மைகள் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு நடைபெறுவதை பொதுமக்களே பாராட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களும் காவல்துறையினருக்கு நன்றி கூறி சென்றனர்.
