
தேனி மாவட்டத்தில் முழு ஊரங்கிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்
தேனி மாவட்டத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பகுதி நேர ஊரடங்கு உள்ளது இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது அதன்படி நேற்று 2வது ஞாயிற்று கிழமை தேனி பெரியகுளம் உத்தமபாளையம் ஆண்டிபட்டி போடி கம்பம் சின்னமனூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது சாலைகள் தோறும் காவல் துறையினர் பலத்த வாகன சோதனையில் ஈடுபட்டனர் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் மூப்பட்டிருந்தன பொது மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்
