
தேனியில் முக்கிய பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
தேனியில் முக்கியமான தெருக்களில் போலீசாரின் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது .தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் மிகவும் அதி நவீனமானது. இரவிலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யக் கூடியவை .இந்த சி.சி.டி.வி கேமரா 24 மணிநேரமும் பதிவுகளை கண்காணிக்க தேனி, அல்லிநகரம் ,பி.சிபட்டி ஸ்டேஷன்களில் மற்றும் டிஎஸ்பி ஆபீஸ், எஸ்பி ஆபிஸ் நேரு சிலை குடை ஆகிய இடங்களில் மானிட்டர் வைக்கப்படுகிறது. திரு .எம் . பால்சுதர் டிஎஸ்பி அவர்கள் கூறுகையில் தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் .தேனியில் செல்போன் பேசிக்கொண்டே டூவீலர் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேஸ் செல்பவர்கள் ,அதிவேகம் பைக் மற்றும் கார் ஓட்டுபவர்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த சி.சி.டி.வி கேமரா கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ளது .என்று தெரிவித்தார்
