வாகன ஓட்டிகளே உஷார்…டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஜனவரி 9, 16, ஆகிய நாட்களில் ரூ. 78,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக. டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் அந்த சுற்றறிக்கையில் முழு ஊரடங்கின் போது வெளியூர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் ரயில் நிலையங்கள் பேரூந்து நிலையங்களில் இருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ டாக்ஸிகள் கிடைக்காமல் அவதியுற்றதாவும் அவ்வாறு கிடைத்த ஆட்டோ டாக்ஸிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன.எனவே இனி வரும் ஊரடங்கு நாட்களில் இது போன்றவை தவிற்க்கப்பட வேண்டும் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் மக்கள் பயனிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்
மேலும் தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஜனவரி 9, 16, ஆகிய நாட்களில் விதிகளை மீறியதாக 78,34,900 ரெ. அபராதம் வசூலிக்கப்பட்டது ஊரடங்கு விதிளை மீறியதாக ஜனவரி 9 ல் 19,962 வழக்குகளும் ஜனவரி 16 ல் 14,951 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே வாகன ஓட்டிகள் ஊரடங்கு விதிகளை முறையாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
