
திருடப்போன இடத்தில் விழுந்து அடிபட்ட திருடன்
மதுரை தத்தனெரி கனேசபுரத்தை சேர்ந்தவர் காயாம்பு மகன் பிச்சைகனி வயது 46/22, இவர் கடந்த 18 ம் தேதி தன் வீட்டின் மாடிக்கதவை சாத்தி விட்டு குடும்பத்துடன் வரண்டாவில் தூங்கினார் இரவு 2 மணிக்கு மாடிக்கதவு திறந்திருப்பதை பார்த்து இவரது மனைவி சொல்ல பிச்சைகனி மின் விளக்கை போட்டதும் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டிலுள் இருந்து மாடிக்கு தப்பி ஓடினார் அப்போது அவர் எதிர்பாராத விதமாக படிகளில் உருண்டு விழுந்து காயமுற்றார்.விசாரித்ததில் அவர் தத்தனெரி பெ.ரியசாமி நகரை சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்தது. சென்னை பள்ளிக்கரணையில் வசிக்கும் இவர் பொங்கல் திருவிழாக்கு வந்தவர் திருட மூயற்சித்து சிக்கி கொண்டார்.செல்லூர் போலீசார் சார்பு ஆய்வாளர் திரு மணபாலா அவர்கள் வழக்கை விசாரித்து வருகிறார்.
