Police Department News

தமிழ்நாடு அரசு மாநகராட்சி நகராட்சிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மாநகராட்சி நகராட்சிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வணிக ரீதியிலான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கட்டிடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

மேலும் காவல்துறை மூலம் ஒவ்வொரு காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிக ரீதியிலான கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி வைக்க வேண்டும் என அப்பகுதி யில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தி உள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் வணிக ரீதியிலான கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிகம் செய்பவர்கள் தாமாக முன்வந்து தங்களது கடைகளுக்கு உள்ளேயும், கடைகளுக்கு வெளியேயும் தங்கள் கட்டிடங்களுக்கு வரும் நபர்களை பற்றி கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவ்வாறு சிசிடிவி பொருத்த கடைகளுக்கு காவல்துறை மூலம் நோட்டீஸ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை கடைப்பிடிக்காத வணிக வளாக உரிமையாளர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிகம் செய்பவர்கள் மீது கண்டிப்பாக மேற்கண்ட அரசாணையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மேலும் இவ் அரசாணையின் படி சிசிடிவி வைக்க மறுப்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

எனவே மேற்கண்ட அரசாணையின்படி மதுரை மாவட்டத்தில் குற்றவாளிகளின் நடவடிக்கையினை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வணிக வளாகங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி மதுரை மாவட்டத்தில் ஒரு பாதுகாப்பான மாவட்டமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.