Police Department News

ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்
அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெட் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து 129 ரயில் பேட்டரிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிய வழக்கில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கானது தண்டையார்பேட்டை RPF ஆய்வாளர் எம். எஸ். மீனா தலைமையிலான தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், Bolero Maxx Pick-up வாகனம் (TN10 BU 6355) சந்தேகத்திற்கிடமாக ரயில் யார்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது. சோதனையில், அந்த வாகனத்தில் Amara Raja நிறுவனம் தயாரித்த 5 ரயில்வே VRLA பேட்டரிகள் (12V–70Ah), மொத்தம் ரூ.22,000 மதிப்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் வாகன ஓட்டுநர் நாகராஜ் (Thiruvellavoyal) என்பது தெரியவந்தது,

அதனை தொடர்ந்து நடத்தப்பட்டு விசாரணையில், அவர் 16.10.2025 அன்று அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 44 பேட்டரிகள் மற்றும் இதற்கு முன் 90 பேட்டரிகள் திருடி, மொத்தம் 129 பேட்டரிகளை ரூ.2.58 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

பின்னர், நாகராஜ் கைது செய்யப்பட்டு (A1), Ennore Out Post வழியாக Cr.No.07/2025 & 08/2025 U/s 3(a) RP(UP) Act வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு, பொன்னேரி JM-I நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைத் தேடி வந்த RPF போலீசார் பொன்னேரி ஜெயமணி நகர், வேணுகோபால் 2வது தெருவில் உள்ள இரும்புக் குப்பை கடையில் சோதனை நடத்தினர்.
அதில்,

09 இரயில்வே VRLA பேட்டரிகள்

49 ஈயச் சதுரங்கள் (Lead Ingots)

Tata Super Ace வாகனம் (TN19 P 4203)
பறிமுதல் செய்யப்பட்டு
கடை உரிமையாளர் ஸ்ரீனிவாசன் (48) கைது செய்யப்பட்டார். பின்னர், அவரது ஒப்புதலின் பேரில் பி. மணிமாறன் (33) என்பவரும் Mahindra Bolero Maxx (TN11 P 8798) வாகனத்தில் 09 பேட்டரி என மொத்தம் 134 பேட்டரிகளுடன் கைப்பற்றப்பட்டன,

அதனைத் தொடர்ந்து
இருவரையும் TNPM RPF Cr.No.07/2025 & 08/2025 வழக்கில் இணைக்கப்பட்டு, பொன்னேரி JM-I நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் கிளைச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையை ஆய்வாளர் எம். எஸ். மீனா தலைமையிலான தண்டையார்பேட்டை RPF போலீசார் திறம்பட மேற்கொண்ட செயலால் ரயில்வே அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.