வங்கி காப்பீட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து விதி முறைகள் மற்றும் கொரோனா நோய் தொற்று தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படித்தவர்கள் மத்தியிலும் சற்று கவனக்குறைவு காரணமாக முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது நடைமுறையில் இருந்துதான் வருகிறது. முன்களப்பணியாளர்கலான காவல் துறையினரும் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் நேற்று 22.01.22..தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் மதுரை ஐசிஐசிஐ வங்கி இன்சூரன்ஸ் பிரிவினருக்கு போக்குவரத்து விதி முறைகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம் என்று அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின் பற்றுவோம் எனவும் உறுதிமொழி ஏற்க்க செய்தார்.
