திருச்சுழி அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல், இருவர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்றுப் பகுதிகளில் ஆற்று மணல் அரசு அனுமதியின்றி அள்ள படுவதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில்
திருச்சுழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் திருச்சுழி – இராமேஸ்வரம் சாலையில் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தபோது TN 72 AD 6988 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது லாரியில் இருந்த ஓட்டுனர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். அதன் பின்பு வாகனத்தில் இருந்த பசும்பொன்ராஜா என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் லாரியில் திருட்டுத்தனமாக சுமார் 3 யூனிட் ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, பசும்பொன் ராஜா வையும், மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மணலுடன் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும்,தப்பி ஓடிய கோரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் லாரியின் ஒட்டுனர் முத்துக்குமார் மற்றும் செம்பொன் நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பசும்பொன்ராஜா ஆகிய இருவர் மீது திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
