
டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்
திருநெல்வேலி மாவட்டம்
சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர்
அரவிந்த் பெருமாள் வயது (34). இவர்
முதல்நிலைக்காவலராக
சுத்தமல்லி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 12 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக – இந்திய பொருளாதாரம பற்றி படித்து சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழக கவர்னர் அவர்களிடம் டாக்டர் பட்டம் பெற்றார் பட்டம் பெற்றார்.
டாக்டர் பட்டம் பெற்ற கையோடு அத்துடன் நாகர்கோவிலில் உள்ள S.T Hindu Collage-ல் வேலைக்காண அழைப்பும் வந்தது.
2.2.2022-ம் தேதிமுறை படி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்று காவல்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பேராசிரியராக சென்றுவிட்டார்.
காவல்துறையில் வேலை பார்த்துக்கொண்டு படித்து டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியர் பதவிக்கு சென்றது காவல்துறையிலேயே மிகவும் பாராட்டுக்கு உறிய செயலாகும்.
சுத்தமல்லி காவல் நிலையத்தில் நடந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் உடன்பணி புரிந்த காவலர்களும், ஆய்வாளரும் வாழ்த்தி வழி அனுப்பிவைத்தனர்.
இவருடைய மனைவி திருமதி. பேட்சியம்மாள் இவரும் டாக்டர் பட்டம் பெற்று திருநெல்வேலியில் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
