விருதுநகர் மாவட்டம்:-
பெண்களுக்கு எதிரான பாலியல் எதிர்ப்பு பிரத்யேக எண் 181 மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
நாளுக்கு நாள் பெண்களுக்கான பாதுதுகாப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
அதனை மேம்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தின் சார்பாக பேருந்துநிலையம், கடைத்தெரு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் பெண் காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பலருக்கும் தெரிந்தும் அதன் முக்கியத்துவம் தெரியாமல் போவதால் அவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பணியாற்றி வருகின்றனர்.
மக்களின் நலனில் அன்றும் இன்றும் என்றும் பணியாற்றி வரும் மகளிர் காவலர்கள் ஆற்றும் பணிகள் மகத்தானதாகும்.
