
மதுரை சிலைமான் பகுதியில் பெண்ணைத்தாக்கிய 2 பேர் கைது
மதுரை சிலைமான் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த முகமது அன்சாரி மனைவி சம்சுபீவி வயது 40 இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது இதன் காரணமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சம்சுபீவி சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹக்கீம் வயது 38 அராபத் வயது 33, ஆகிய 2 பேரும் அங்கு வந்தனர் அப்போது எங்கள் மீது போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு என்று மிரட்டியுள்ளார். ஆனால் சம்சுபீவி மறுத்து விட்டார் எனவே ஆத்திரமடைந்த இருவரும் சம்சுபீவீயை சரமாரி தாக்கியுள்ளர் இது சம்பந்தமாக சம்சுபீவீ சிலைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
