மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை
மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டிய வழிமுறைகளுக்கான நிகழ்ச்சி மதுரைக் கல்லூரியில் 30.3.22 ம் தேதி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி IPS அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு UPSC தேர்வில் எப்படி வெல்லலாம் என்ற அறிவுரைகளை வழங்கினார்கள்.
மேலும் தேர்வர்கள் தேர்விற்கு எந்த விதத்தில் தயாராவது என்பது குறித்தும்,
தேர்வு எழுதும் விதம் குறித்தும்,
தேர்வில் கலந்து கொண்டு குடிமைப் பணிகளை தேர்வு கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும்,
குடிமைப் பணி தேர்வுகளில் தேர்வு பெற்று சமுதாயப்பணி ஆற்ற முன்வர வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
