
மதுரையில் 603 கிலோ புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை
மதுரை விளக்குத்தூண் பகுதியில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நெல்போட்டை காயித்தே மில்லத் நகரில் அதிரடி சோதனை நடாத்தினர். அப்போது இமாம் ஹசாலி வயது 46, என்பவர் வீட்டிலிருந்து 603 கிலோ மதிப்புள்ள 20 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
