திருச்சியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது 3.36 லட்சம், மடிக்கணினி, பிரிண்டர், செல்போன்கள் பறிமுதல்
திருச்சி மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது வீட்டில் ஆன்லைன் மூலம் சீட்டுகள் விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் (பொறுப்பு) பாரதிதாசன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வம் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு மடிக்கணினி மூலம் ஆன்லைன் வழியாக லாட்டரி சீட்டுகளை பெற்று அவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 லட்சத்து 36 ஆயிரம் பணம், 1 மடிக்கணினி, 2 செல்போன் , 1 பணம் என்னும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.