Police Department News

மதுரை திருப்பாலையில் கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை

மதுரை திருப்பாலையில் கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை

மதுரை திருப்பாலை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அருணாதேவி (வயது 23). இவருக்கும், அருண் குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடை பெற்றது. இருவரும் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அருணா தேவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து கணவர் அருண்குமார், அருணாதேவிக்கு வலிப்பு நோய் இருப்பதாக கூறி தகராறு செய்து மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறி விட்டார். அதன் பின்னர் அருணாதேவி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

திருமணமான ஒரு மாதத்தில் கணவர் வலிப்பு நோயை காரணம் காட்டி பிரிந்து சென்றதால் அருணாதேவி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதுதொடர்பாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்று பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அருணாதேவி மட்டும் தனியாக இருந்தார். ஏற்கனவே மனம் உடைந்த நிலையில் இருந்த அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று மதியம் வெளியில் சென்ற பெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது மகள் தூக்கில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மின் விசிறியில் தொங்கிய அருணாதேவி உடலை மீட்டு உறவினர்கள் பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பாலை போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருணா தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி கணவரு டன் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.