

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏர் பிஸ்டலை காட்டி டோல் கேட் ஊழியரை மிரட்டிய மூவர் கைது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் 20.04.22 தேதி ராஜா த/பெ மூர்த்தி திருமங்கலம் என்பவர் பணியில் இருந்தபோது தென்காசி மாவட்டம் சுரண்டை யைச் சேர்ந்த 1.ஜெயக்குமார் த/பெ முப்பிடாதி 2. முத்துக்குமார் த/பெ ஐயாத்துரை 3. பொன்ராஜ் த/பெ கடற்கரை ஆகிய மூவரும் TN 69 A 8313 என்ற எண் கொண்ட பொலிரோ வாகனத்தில் சுங்கச் சாவடியை கடக்க முயலும்போது மேற்படி ராஜா என்பவர் சுங்கச்சாவடி கட்டணம் கேட்க வாகனத்தில் இருந்த மூன்று நபர்களும் கையில் வைத்திருந்த ஏர்கன் மற்றும் கைத்துப்பாக்கியை காண்பித்து எங்களிடமே பணம் கேட்கிறாயா உன்னை சுட்டு விடுவதாக மிரட்டிக்கொண்டு இருக்கும்போது அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே அங்கிருந்து மதுரை நோக்கிச் சென்றுள்ளனர்.
மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ராஜா என்பவர் புகார் கொடுத்துள்ளார். இப்புகார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வீ.பாஸ்கரன் அவர்கள் உத்திரவின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
