
மதுரை திருமங்கலம் மகளீர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கில் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 60,000/- அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட எதிரிக்கு போக்சோ சட்டத்தின்படி ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் புதிய சட்டத்தின்படி ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அந்தந்த புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளத.
அந்தவகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தாக்கலான பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தும்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் தர்மதுரை வயது 25 என்பவருக்கு எதிராக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் மேற்படி எதிரி தர்மதுரை என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதித்து 25.4.22 தேதி தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் தாக்கலாகியுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து புலன்விசாரணை முடித்து உரிய நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை சட்டத்தின் மூலம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் எதிரிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
