ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு ஆவணங்களின்றி வந்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம்
திருப்பூரை சேர்ந்த ஒருவர் அங்குள்ள டவுன் போலீஸில் அளித்த புகார் தொடர்பாக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நடைபெற்று வருகிறது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டருக்கு பதில் போலீஸ்காரர் ஒருவர் ஆஜர்
ஆனார் அவரிடம் வழக்கு தொடர்பான விபரங்களை நீதிபதி கேட்டார் அதற்க்கு அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார் எந்த விதமான ஆவணங்களும் போலீஸ்காரரிடம் இல்லை.
இதையடுத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா போலீஸ்காரருக்கு கண்டனம் தெரிவித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரிகள் ஆஜர் ஆவதில்லை என்றும் ஆவணங்களை தாக்கல் செய்வதில்லை என்றும் தெரிவித்தார்
எனவே வருங்காலங்களில் உரிய ஆவணங்களுடன் இன்ஸ்பெக்டர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.